Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

ஒரே மாதத்தில் உடல் எடையைக் குறைக்க இந்த யோகாசனங்களைத் தொடர்ந்து செய்து வந்தால் போதும்...

A
Admin User
Journalist
June 25, 2022 5 min read 146 views
ஒரே மாதத்தில் உடல் எடையைக் குறைக்க இந்த யோகாசனங்களைத் தொடர்ந்து செய்து வந்தால் போதும்...

நீங்கள் உடல் எடையை குறைக்க பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி அதில் பயனடையவில்லை என்றால், இனி எந்த கவலையும் வேண்டாம். உணவு உண்ணாமல். புதிய புதிய டயட் முறைகளைப் பின்பற்றுவது என உடல் எடையைக் குறைக்க பலரும் வெவ்வேறு முறைகளைப் பின்பற்றி ஏமாற்றம் அடைவதுண்டு. உடல் எடையைக் குறைக்க உதவும் சிறந்த பழமையான வழிகளில் ஒன்று யோகா. யோகாசனம் உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருப்பது மட்டுமின்றி, மனதையும் அமைதியாக வைத்திருக்கும். உடலையும், மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க தினசரி வழக்கத்தில் யோகாவை சேர்த்து கொள்வது சிறந்த வழி. உடல் எடையை குறைப்பதில் யோகா பெரிதும் உதவிடும். அதிலும், சில குறிப்பிட்ட யோகாசனங்களை தொடர்ந்து தினந்தோறும் அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உடல் எடையை குறைக்கும் யோகாசனங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

சூரிய நமஸ்கர்

யோகாசனத்தில் மிகவும் முதன்மையானது சூரிய நமஸ்காரம். உண்மையில் சூரிய நமஸ்காரம் என்றால் சூரியனை வாழ்த்துவது என்று பொருள். இந்த யோக ஆசனத்தில் 12 யோகா ஆசனங்கள் ஒன்றாக சேர்த்து செய்யப்படுகிறது. இந்த யோகா முழு உடலுக்கும் நன்மை பயக்கும். 10 முதல் 15 நிமிடங்கள் சூரிய நமஸ்காரம் செய்தால் உடலுக்கு தேவையான அனைத்து நன்மைகள் கிடைத்துவிடும்.

வீரபத்ராசனம்

வீரபத்ராசனம் என்பது போர்வீரர் தோரணை என்று அழைக்கப்படுகிறது. மேலும், இந்த ஆசனத்தில் உங்கள் நிலை மலைகளை போல் நிமிர்ந்து நின்றபடியானது. இதில், உங்கள் பாதத்தை பின்னோக்கி இழுத்து, மற்றொரு காலை முன்னோக்கி அறைமண்டி நிலையில் வைக்கவும். பின்னர், கைகளை மேல்நோக்கி வணங்கியபடி நீட்டி தலையை மேலே உயர்த்தி பார்க்கவும். இதே நிலையில் சிறிது நேரம் நின்றுவிட்டு, பின்னர் கைகளை கீழே கொண்டு வந்து கால்களை நேராக்கி இயல்பு நிலைக்கு திரும்பவும். அதன் பிறகு, காலை மாற்றி இதே நிலையில் நிற்கவும். இந்த ஆசனம் உடலை ஒருநிலைப்படுத்தி தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை சீர்ப்படுத்தும்.

திரிகோணாசனம்

திரிகோணாசனம் என்பது முக்கோண வடிவில் நின்றபடியான ஆசனம். இதைச் செய்ய, உங்கள் இரு கால்களையும் விரித்து, கைகளை வெளிப்புறமாக நீட்டவும். பின்னர் நேராக கைகளை நீட்டியவாறே இடுப்பை பக்கவாட்டில் வலது புறமாக கால் முட்டிகளை மடிக்காமல் நேராக வளைந்து வலது கையை வலது கால் பாதத்திற்கு இணையாக தரையில் படும்படியாகவும், இடது கை மேல் நோக்கியபடி இருக்கும்படியாக நிற்கவும். இதே போல், இடது புறமாக வளைந்து செய்யவும். இப்படி தொடர்ந்து 4 முதல் 5 முறை செய்யவும். இவ்வாறு செய்வது உடலின் எலும்புகளுக்கு வலு சேரப்பதோடு, வயிற்றி தசையைக் குறைத்து ஆரோக்கியமாக இருக்க உதவிடும்.

பூர்வோத்தனாசனம்

இந்த ஆசனத்தை செய்ய, மேலே உள்ள படத்தில் உள்ள படி காட்டியுள்ள படி தரையில் அமர்ந்து கால்களை முன்னோக்கி நீட்டியபடி உட்காரவும். இப்போது உங்கள் கைகளை இடுப்புக்கு பின்னால் தரையில் படும்படி தரையில் வைக்கவும். அதன் பிறகு உங்கள் கால்களால் உடலை மேல்நோக்கி உயர்த்தி, தலையை பின்னோக்கி நகர்த்த முயற்சிக்கவும். சாதாரணமாக புஷ்-அப் செய்யும் நிலைக்கு நேர் மாறாக நிலை இது. இந்த ஆசனம் செய்வதால் உங்கள் முதுகு, தோள்கள், கைகள், முதுகுத்தண்டு, மணிக்கட்டு மற்றும் தசைகளுக்கு மிகவும் நல்லது.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க